நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாநாயக்கார அவர்கள் மொரட்டுவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள தேவைகளைக் கண்டறிவதற்காக நேற்று பிற்பகல் (27) சிறப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கௌரவ நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவையான வசதிகள் குறித்து இதன்போது அவர் கண்டறிந்தார்.
மொரட்டுவை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடியதுடன், நீதிமன்றத்திற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
மொரட்டுவையில் புதிய நீதிமன்ற வளாகமொன்றைக் நிர்மாணிப்பது தொடர்பில் சட்டத்தரணிகளுக்கும் நீதி அமைச்சருக்கும் இடையிலான இக்கலந்துரையாடலில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மொரட்டுவை நீதிமன்றச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான சட்டத்தரணி இஷாரா லொகுபத்ம, அதன் செயலாளரான சட்டத்தரணி ரொனாலி லொகுபாலசூரிய உள்ளிட்ட சட்டத்தரணிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.








