1969ம் ஆண்டின் 03ம்இலக்க இலங்கை சட்டஆணைக்குழு சட்டத்தின் மூலம் இலங்கை சட்ட ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. இது சட்ட மறுசீரமைப்பை மேற்கொள்ளும் பிரதான அரசாங்க நிறுவனமாகும். சட்ட ஆணைக்குழு திணைக்களத்தின் பிரதான பணி தேவையான நிருவாக மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்குவதாகும்.
நோக்கு
நல்லாட்சிக்காக சட்ட மறுசீரமைப்பை மேம்படுத்தல்.
செயற்பணிகள்
சட்ட மறுசீரமைப்பை மேம்படுத்துவதற்காக சட்ட ஆணைக்குழுச் சட்டத்தால் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்ட மற்றும் விதிக்கப்பட்ட பணிகளை அமுல்படுத்தல்.
நோக்கமும் தொழிற்பாடுகளும்
சட்ட ஆணைக்குழுவின் பிரதான நோக்கம் சட்ட மறுசீரமைப்பை விருத்திசெய்வதாகும். அதற்காக சட்டஆணைக்குழு பின்வரும் பணிகளை ஆற்றுகிறது.
- சட்டத்தை குறியீடு செய்தல்.
- முரண்பாடுகளை ஒழித்தல்.
- சட்டத்தை முறையாக அபிவிருத்தி செய்து மறுசீரமைப்பதற்காக பொருள் அளவிலானதும் நடவடிக்கைமுறை சார்ந்ததுமான சட்டத்தை மீளாய்வு செய்தல்.
- வழக்கொழிந்த மற்றும் அனாவசியமான சட்டங்களை அகற்றுதல்.
- சட்டத்தை எளிதாக்குதலும் நவீனமயப்படுத்தலும்.
- சட்டத்தை மறுசீரமைப்பதற்காக எவ்வாறான பிரேரணைகளையும் பெற்று பரிசீலித்தல்.
- மறுசீரமைப்பதற்காக காலத்திற்குகாலம் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளை ஆராய்வு செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரித்து அமைச்சருக்கு வழங்குதல்.
- ஏனைய நாடுகளின் சட்டமுறை சம்பந்தமான தகவல்களை பெறல்.
- துணைச் சட்டவாக்கங்கள் நன்கு ஏற்றுக்கொண்ட கோட்பாடுகளுக்கும் சட்டத்திற்கும் இயைபானதென்பதை, பாதுகாக்கும் எண்ணத்துடன் பாராளுமன்றம் அல்லாத வேறு சபைகளால் துணைச் சட்டங்களை ஆக்கும் அதிகாரத்தை அமுல்படுத்துவதை நிரந்தரமாக மீளாய்வு செய்தல்.
- வழக்காடுதல் சம்பந்தப்பட்ட நிருவாகத் தன்மையின் நடவடிக்கை முறை உட்பட சட்ட நடவடிக்கை முறைகளை பகுத்தறிவு செய்தல் மற்றும் இலகுபடுத்துவதற்காக நிகழ்ச்சித் திட்டங்களை முறையாகத் தயார் செய்தல்.
- சிங்களம், தமிழ் ஆங்கிலம் ஆகியமொழிகளில் சட்டத்தை குறியீடுசெய்வதற்கு நிகழ்ச்சித் திட்டங்களைத் தயார் செய்தல்.
செயலாளர்
இலங்கையின் சட்ட ஆணைக்குழு
4 வது மாடி,
நீதி அமைச்சின் புதிய கட்டிடம்
இல 80, அதிகரன மாவத்தை,
கொழும்பு 12.
+94 112 333 884
+94 112 333 884
இலங்கை சட்ட ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக
இலங்கை நீதிமுறைமையில் அதியுயர்ந்த நீதிமன்றம் உயர்நீதிமன்றமாகும். அதிமேதகு சனாதிபதி அவர்களால் நியமிக்கப்படும் கௌரவ பிரதம நீதியரசர் உட்பட 11 உயர்நீதிமன்ற நீதிபதிகள் உயர் நீதிமன்றத்திடம் கிடைக்கப்பெறும் எல்லா விண்ணப்பங்களையும் விசாரிக்கின்றனர்.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் மூலம் உயர் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் பின்வருமாறு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது:-
- அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய நியாயாதிக்கம்
- அடிப்படை உரிமைகள் பற்றிய நியாயாதிக்கம்
- இறுதி மேன்முறையிட்டு நியாயாதிக்கம்
- மதியுரை நியாயாதிக்கம்
- தேர்தல்கள் மனுக்கள் (சனாதிபதி தேர்தல்) பற்றிய நியாயாதிக்கம்
- எந்தவகையினதும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறல் பற்றிய நியாயாதிக்கம்
- பாராளுமன்ற சட்டத்தால் விதிக்கக்கூடிய பிற விடயங்கள் பற்றிய நியாயாதிக்கம்
உயர் நீதிமன்றம் அதன் செயல்பாடுகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் உதவுகிறது. இதற்கான நிதியை நீதி அமைச்சு செலவினத்தலைப்பு 234 இன் மூலம் வழங்குகிறது. உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் பணிகளாவன:
- உயர் நீதிமன்றப் பதிவுகளைப் பராமரித்தல்.
- அமர்வுகள் மற்றும் விண்ணப்ப அட்டவணைகளை ஒழுங்கு செய்தல்.
- நீதிமன்ற உத்தரவுகளையும் தீர்ப்புகளையும் பதிவு செய்தல்.
- உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளை அனுமதித்தல்
- மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து பெறப்படும் வழக்கேடுகளைத் தயாரித்தலும் சட்ட செலவுகளை மதிப்பீடு செய்தலும்.
திருமதி. எம்.எம். ஜயசேகர,
சட்ட வழக்கறிஞர்
+94 112 435 446
உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக
நோக்கு
நியாயமான சட்டத்தை மதிக்கின்ற சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்.
செயற்பணிகள்
நீதிமன்றங்கள், சட்டத்தை அமுல்படுத்துகின்ற நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சட்ட மருத்துவ, மற்றும் உணவு விஞ்ஞானம் பற்றிய பகுப்பாய்வு, அறிவுரை மற்றும் மதியுரை சேவைகளை வழங்குதல்.
செயற்பாடுகள்
இலங்கையிலுள்ள ஒரேயொரு சட்ட ஆய்வுகூடமான அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் உணவு விஞ்ஞானப்பிரிவு, தடயவியல் விஞ்ஞானப்பிரிவு ஆகிய இரு பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது. உணவு விஞ்ஞானப் பிரிவானது உணவு, மதுபானம், பால் மற்றும் நீர் ஆகிய நான்கு ஆய்வுகூடங்களை உள்ளடக்கியுள்ளது. தடயவியல் விஞ்ஞானப் பிரிவானது எறிபடை தடயவியல் பிரிவு, நீர்ப்பாய தடயவியல் மற்றும் DNA பிரிவு, நச்சு தடயவியல் பிரிவு, வெடிபொருட்கள் மற்றும் தீ புலனாய்வுப் பிரிவு, போதைப் பொருள் தடயவியல் பிரிவு, சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் தடயவியல் பிரிவு, மற்றும் நானாவித தடயவியல் பிரிவு ஆகிய ஏழு துறைகளைக் கொண்ட 11 உப பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அறிவுரைகள் ஆலோசனைகள் மற்றும் விஞ்ஞான சேவைகள் வழங்குவதன் மூலம் இது சேவை வழங்கும் ஒரு திணைக்களமாவதுடன் நீதிமன்றங்கள், பொலிஸ், சுங்கத் திணைக்களம், மதுவரி திணைக்களம், துறைமுகங்கள், உள்ளுராட்சி நிறுவனங்கள், சுகாதாரம், பிற அரசாங்க திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் இருந்துபெறப்படும் சான்றுப் பொருட்களை விஞ்ஞான பரிசோதனை மற்றும் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கைகளை வழங்குகிறது. இதற்கு மேலதிகமாக பல்வேறு அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அரசாங்க அனுசரணை பெறுகின்ற நிறுவனங்களின் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற உணவுகள், மதுபானங்கள், பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு அலுவல்களுக்காக பரிசோதனை செய்யப்படுவதுடன் இலங்கை சுங்கத்தால் ஆற்றுப்படுத்தப்படுகின்ற மாதிரிகள் தரம் மற்றும் சுங்கவரி வகைப்படுத்தலுக்காக பரிசோதனை செய்யப்படுகின்றன. மேலும் நாடு முழுவதிலுமுள்ள நீதிமன்றங்களால் சமர்ப்பிக்கப்படுகின்ற சந்தேகத்திற்குரிய ஆவணங்களை பரிசோதனை செய்து அறிக்கையிடுதலும் இத் திணைக்களத்தின் மூலம் செய்யப்படுகின்றது.
பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்படும் சான்றுப் பொருட்கள் அல்லது மாதிரிகள், உணவு மற்றும் மருந்துகள் சட்டம், தேசிய சுற்றாடல் சட்டம், மதுவரிக் கட்டளைச் சட்டம், புகையிலை மற்றும் மதுபான தேசிய அதிகாரசபை சட்டம், ஒப்பனைப் பொருட்கள் அவுடதங்கள் மற்றும் சாதனங்கள் சட்டம், பீடைகொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டம், சுடுகலன் கட்டளைச் சட்டம், விசம், அபின் மற்றும் அபாயகர ஒளடத சட்டம், வெடிபொருள் சட்டம், தீங்கு விளைவிக்கும் ஆயத சட்டம், மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை, குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை, சான்றுகள் கட்டளைச்சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் மற்றும் கட்டளைச்சட்டங்களின் கீழ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை வழங்குதல் இத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக பிற அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு பெறுகின்ற நிறுவனங்களிற்கு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் விஞ்ஞான மதியுரைஞராகவும் இத்திணைக்களம் செயலாற்றுகிறது. விசேஷமாக, இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு தரத்தை உருவாக்குவதில் இந்நிபுணர்களின் பங்களிப்பு முக்கயமானதாகும். இந்நிபுணர்கள் பாதுகாப்பு அமைச்சின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவிற்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க உதவிபுரிகின்றனர்.
இத் திணைக்களம் 2013 மே மாதம் முதல் பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடமொன்றிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அத்தியாவசியமாகத் தேவைப்படும் டீ.என்.ஏ. ஆய்வுகூடமென்று தேவையான எல்லா உபகரணங்களுடனும் இவ்வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற சான்றுப்பொருட்களின் பகுப்பாய்வு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்திணைக்களம் குருநாகலில் மாகாண ஆய்வுகூடமொன்றை நிறுவியுள்ளது.
இல 31, இசுறு மாவத்தை,
பெலவத்த,
பத்தரமுல்ல.
+94 112 176 800 / +94 112 786 395
+94 112 786 394
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக
நோக்கு
அசையா சொத்து சம்பந்தப்பட்ட கடனை திருப்பி செலுத்துவதற்கு பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஒரு நிவாரண ஏற்பாட்டை வழங்குதல்.
செயற்பணிகள்
கடன் கொடுக்கல் வாங்கல்களுக்காகவே எழுதப்பட்ட அடைவு முறிகள், நிபந்தனையுடன் கூடிய உறுதி மற்றும் அறுதி என்பவற்றின் மீது பெறப்பட்ட கடன்களை குறைந்த வட்டி வீதத்துடன் தவணை முறையில் செலுத்துவதன்மூலம் பிணையாக வைக்கப்பட்ட விவசாய நிலங்கள், வீடு போன்ற அசையா சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கு கடன்பட்டோருக்கு சட்டப் பாதுகாப்பையும் உதவியையும் வழங்கல்
குறிக்கோள்
அசைவற்ற ஆதனங்கள் தொடர்பான கடன் கொடுக்கல் வாங்கல்களுக்காகவே எழுதப்பட்ட அடைவு முறிகள், நிபந்தனையுடன் கூடிய உறுதி மற்றும் அறுதி என்பவற்றின் மீதான கடன்களை மீளச் செலுத்துவதன்மீது தீர்வொன்றை எட்டுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உதவுதல்.
1941ம் ஆண்டின் 39 ம் இலக்க கடன் இணக்க சபை கட்டளைச்சட்டத்தின் கீழ் இத் திணைக்களம் தாபிக்கப்பட்டது. இத் திணைக்களமானது காணி, நெல்வயல்கள், பெருந்தோட்டங்கள், வீடுகள் போன்ற அசைவற்ற ஆதனங்களின் உறுதியை நிபந்தனையுடன் பிணைவைத்து பெற்றுக்கொண்ட கடன்களின் மூலமும் சத்தியக்கடதாசி மற்றும் காசோலை போன்ற ஆவணங்களின்மீது பெறப்பட்ட பிணையற்ற கடன்களின் மூலம் ஏற்பட்ட கடன்சுமைக்கு உள்ளான மக்களுக்கு ஏதாவது நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.
1999ம் ஆண்டின் 29ம் இலக்க திருத்த சட்டம் கடன் கொடுக்கல் வாங்கல்களுக்காகவே எழுதப்பட்ட அறுதியுறுதிகளின் மீது இச்சபை இடையீடு செய்வதற்கு வழிவகுத்து இதன் நிவாரண உதவி நடவடிக்கைகளை மேலும் விரிவடையச் செய்துள்ளது.
இச் சபையின் செயற்பாட்டின் மூலம் கடன் கொடுத்தவர்களால் கடன்பட்டவர்கள் சுரண்டப்படுவதற்கு உள்ள சந்தர்ப்பங்கள் முடக்கப்படுகின்றன. சபையின் தலையாய நோக்கம் இது எனினும் கடன் கொடுத்தவர்களுக்கும் அநீதி ஏற்படுவதற்கு இடமளிக்காது. ஈட்டு உறுதிகளின் மீது மற்றும் நிபந்தனையுடனான அறுதியுறுதிகளின் மீது வைக்கப்பட்டுள்ள அசைவற்ற ஆதனங்கள் தொடர்பில் கடனாளிக்கு இலகுவானதும் கடன் கொடுத்தவர் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான நிபந்தனைகள் மீது அவ்வாதனங்களை மீட்டுக் கொள்வதற்கு உதவியளித்தல் இச்சபையின் நோக்கமாகிறது.
கடன் இணக்க சபையானது அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஐந்து (5) உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன் அவரில் ஒருவர் சபையின் தலைவராக அமைச்சரால் நியமிக்கப்படுவார். சபைக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு எந்தவித கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை. அத்துடன் இச்சபையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முத்திரைத் தீர்வை எதுவும் கிடையாது. வர்த்தமானி மற்றும் அறிவித்தல் கட்டணமாக ஒரு சிறிய தொகை மாத்திரமே அறவிடப்படுகிறது. ஆகவே கடன் சுமையால் பாதிக்கப்பட்ட சராசரி நபரொருவருக்கு மிகப்பெரிய சேவையொன்று வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர் சட்டத்தரணிகள் மூலம் தம்மை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியது கட்டாயமில்லாதிருப்பது பொதுமக்களுக்கு ஆறுதலாக உள்ளது.
இச்சபையின் நடைமுறை நீதிமன்ற நடைமுறையிலிருந்து வேறுபட்டது. இச்சபையில் எட்டப்படும் உடன்படிக்கைகள் கட்சிக்காரர்களினது இணக்கத்துடன் ஏற்படுதேயன்றி சபையின் பணிப்பின்மூலம் அமுல்படுத்தப்படுவதல்ல. அவ்வாறாயினும் நியாயமற்ற வட்டிகளை குறைப்பதற்கு சபையினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான முன்மொழிவுகளை கடன் கொடுத்தவர்கள் ஏற்றுக்கொள்ளாதுவிடின் அது தொடர்பாக கட்டளைச் சட்டத்தின் கீழ் கடனாளிக்கு சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்கும் சபைக்கு தத்துவங்கள் உள்ளன. அத்துடன் கடன் கொடுத்தவர் இறுதி விசாரணைக்காக வழங்கப்பட்ட அறிவித்தலின் படி விசாரணைக்கு சமூகமளிக்காவிடின் மறுகட்சியின்றி வழக்கு விசாரணை ஒன்றின் பின்னர் கடனாளிக்கு சான்றிதழ் ஒன்று வழங்கப்படுகின்றது. ஆயினும் அவ்வாறு செய்யப்படுவது பதிவு அஞ்சலில் அல்லது கிராம உத்தியோகத்தர் மூலம் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கடன்கொடுத்தவரிற்கு அறிவித்து கடன் கொடுத்தவர் வேண்டுமென விசாரணைக்கு சமூகமளிப்பதை தவிர்த்துக் கொள்கிறார் என சபை உணருமிடத்து மாத்திரமே இத்தகைய சந்தர்ப்பமொன்றில் அத்தகைய சான்றிதழ் ஒன்றை வழங்குவதனால் ஏற்படும் நன்மை கடனாளியைச் சேரும்.
நீதிமன்றத்தில் அந்ந விடயம் சம்பந்நமாக வழக்கு விசாரணை ஒன்று நடைபெறும் சந்தர்ப்பத்தில் இச் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் கடன் செலுத்துவதற்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்குவதற்கும் வட்டியை குறைந்த வட்டி விகிதமாக மாற்றுவதற்கும் கடன் இணக்க கட்டளைச்சட்டத்தின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சேயலாளர்,
கடன் இணக்க சபைத் திணைக்களம்
இல. 46,48,
ஆசார்ய.எந்.எம்.பெரேரா மாவத,
பொறளை,
கொழுமுபு 08 .
சேயலாளர் : +94 112 697 910
அலுவலகம் : +94 112 697 911
+94 112 334 816
| View & Download | |
| Application For Relief Under the Debt Conciliation Ordinance | ![]() |
| Instructions to Complete the Application | ![]() |
| Functions of the Department of Debt Conciliation Board | ![]() |








