Accessibility Tools

moj logo

Open menu

நீதி நிர்வாகத்துடன் தொடர்பான சர்வதேச தரநிலைகள் மற்றும் அரச கொள்கைகளுக்கு இணக்கப்பாடான வகையில் தற்போதுள்ள சட்டங்களைத் திருத்துவதற்கும் புதிய சட்டங்களை உருவாக்குவதற்குமான நடவடிக்கை எடுப்பதும், அத்தகைய வரைவுச் சட்டங்களை பாராளுன்றத்தில் இறுதி நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதும், சட்ட அறிக்கைகளை வெளியிடுவதும் இந்தப் பிரிவின் விஷேட செயற்பணியாகும். அதே நேரத்தில், பொதுமக்களின் சட்டப் பிரச்சினைகள் மற்றும் விதிகள், கட்டளை ஒழுங்குமுறைகள் மற்றும் உத்தரவுகளுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறவும் செயற்பட்டு வருகிறது.

நீதி அமைச்சின் செயலாளர் மத்திய அதிகாரியாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களின்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். எடுத்துக்காட்டாக, குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவிக்கான கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளல், சர்வதேச சிறுவர் கடத்தல் தொடர்பான நடவடிக்கை மற்றும் குற்றவாளிகளைப் பரிமாறிக்கொள்ளல் நடவடிக்கைகள்

சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் செயற்படுத்தப்படும் பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளும் அடையாளம் காணப்பட்டு பல்வேறு பரிமாணங்கள் மூலம் தீர்க்கப்படும்.

பிரிவால் செய்யப்படும் பணிகள்.

1. சட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தல். (இணைப்பு 01)
2. இலங்கை சட்ட அறிக்கைகளை அச்சிட்டு விநியோகிக்க ஏற்பாடு செய்தல்.
3. சர்வதேச சமவாயங்களை செயற்படுத்துதல்.
    3.1 2001 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சர்வதேச சிறுவர் கடத்தல்           சம்பந்தமான குடியியல் அம்சங்கள் தொடர்பான          சமவாயங்கள்.
3.2 1995 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குற்றவாளிகளை ஒப்படைக்கும் கோரிக்கை தொடர்பான விடயங்கள்.
3.3 குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் தொடர்பாக குறித்த 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள் .
3.4 வெளிநாடுகளில் குடிபெயர்ந்த பிரதிவாதிகள்/சாட்சியாளர்களுக்கு இலங்கை நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் கட்டளைகள் தொடர்பான விடயங்கள்.
3.5 இலங்கையில் பிரதிவாதிகள்//சாட்சியாளர்களுக்கு வெளிநாட்டு நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்படும் கட்டளைகள்/கோரிக்கைகள் தொடர்பான விடயங்கள்.
3.6 2023 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும், சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மூலம் இலங்கை தூதரகங்கள்/கொன்சுலேற் ஜெனரல் அலுவலகம் மூலம் சாட்சியமளிக்க வெளிநாட்டிலிருந்து சாட்சிகளை வழங்க ஏற்பாடு செய்தல்.
4. பல்வேறு சட்டங்கள் தொடர்பான பொறுப்புகளைத் தீர்மானிக்க நியமிக்கப்பட்ட குழுக்களை நடாத்துவது தொடர்பாக ஒருங்கிணைத்தல்.
5. நீதிமன்ற வலயங்களை நிர்ணயித்தல் மற்றும் புதிய நீதிமன்றங்களை நிறுவுதல் தொடர்பான விடயங்கள்
6. நிறுவன சேவைகளின் ஒப்பந்தங்கள் தொடர்பான விடயங்கள்
7. 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குடியியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் வெளிநாடுகளால் செய்யப்படும் கோரிக்கைகளின் பேரில் செயற்படுதல்.
8. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டப் பிரிவால் பெறப்பட்ட கோரிக்கைகள் .
9.  நிலையான வளர்ச்சி இலக்குகள் மூலம் தேசிய வளர்ச்சி இலக்குகளை அடைதல்.
10. பாராளுமன்ற கேள்விகள் மற்றும் நிலையியற் கட்டளைகள் 27(2) தொடர்பான விஷயங்கள்.
11. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளால் இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பான நீதி அமைச்சின் அவதானிப்புகளை வெளியுறவு அமைச்சிற்கு வழங்குதல்

FaLang translation system by Faboba

பதிப்புரிமை © 2026 நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு.
அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.
வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி Procons Infotech.

Sri Lanka 44.9% Sri Lanka
China 22.6% China
Singapore 15.4% Singapore
United States of America 7.5% United States of America
United Kingdom of Great Britain and Northern Ireland 2.5% United Kingdom of Great Britain and Northern Ireland

Total:

121

Countries
073218
Today: 1,483
This Week: 5,297
This Month: 25,728
This Year: 73,163

Last Modified:
08 January 2026