இலங்கை நீதிமுறைமையில் அதியுயர்ந்த நீதிமன்றம் உயர்நீதிமன்றமாகும். அதிமேதகு சனாதிபதி அவர்களால் நியமிக்கப்படும் கௌரவ பிரதம நீதியரசர் உட்பட 11 உயர்நீதிமன்ற நீதிபதிகள் உயர் நீதிமன்றத்திடம் கிடைக்கப்பெறும்  எல்லா விண்ணப்பங்களையும் விசாரிக்கின்றனர்.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் மூலம் உயர் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் பின்வருமாறு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது:-

  • அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய நியாயாதிக்கம்
  • அடிப்படை உரிமைகள் பற்றிய நியாயாதிக்கம்
  • இறுதி மேன்முறையிட்டு நியாயாதிக்கம்
  • மதியுரை நியாயாதிக்கம்
  • தேர்தல்கள் மனுக்கள் (சனாதிபதி தேர்தல்) பற்றிய நியாயாதிக்கம்
  • எந்தவகையினதும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறல் பற்றிய நியாயாதிக்கம்
  • பாராளுமன்ற சட்டத்தால் விதிக்கக்கூடிய பிற விடயங்கள் பற்றிய நியாயாதிக்கம்

உயர் நீதிமன்றம் அதன் செயல்பாடுகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் உதவுகிறது. இதற்கான நிதியை நீதி அமைச்சு செலவினத்தலைப்பு 234 இன் மூலம்  வழங்குகிறது. உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் பணிகளாவன:

  • உயர் நீதிமன்றப் பதிவுகளைப் பராமரித்தல்.
  • அமர்வுகள் மற்றும் விண்ணப்ப அட்டவணைகளை ஒழுங்கு செய்தல்.
  • நீதிமன்ற உத்தரவுகளையும் தீர்ப்புகளையும் பதிவு செய்தல்.
  • உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளை அனுமதித்தல்
  • மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து பெறப்படும் வழக்கேடுகளைத் தயாரித்தலும் சட்ட செலவுகளை மதிப்பீடு செய்தலும்.

திருமதி. எம்.எம். ஜயசேகர,
சட்ட வழக்கறிஞர்
+94 112 435 446

உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக

சிறப்பு அறிவிப்பு