நோக்கு

அசையா சொத்து சம்பந்தப்பட்ட கடனை திருப்பி செலுத்துவதற்கு  பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஒரு நிவாரண ஏற்பாட்டை வழங்குதல்.

செயற்பணிகள்

கடன் கொடுக்கல் வாங்கல்களுக்காகவே எழுதப்பட்ட அடைவு முறிகள், நிபந்தனையுடன் கூடிய உறுதி மற்றும் அறுதி என்பவற்றின் மீது பெறப்பட்ட கடன்களை குறைந்த வட்டி வீதத்துடன் தவணை முறையில் செலுத்துவதன்மூலம் பிணையாக வைக்கப்பட்ட விவசாய நிலங்கள், வீடு போன்ற அசையா சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கு கடன்பட்டோருக்கு சட்டப் பாதுகாப்பையும் உதவியையும் வழங்கல்

குறிக்கோள்

அசைவற்ற ஆதனங்கள் தொடர்பான கடன் கொடுக்கல் வாங்கல்களுக்காகவே எழுதப்பட்ட அடைவு முறிகள், நிபந்தனையுடன் கூடிய உறுதி மற்றும் அறுதி என்பவற்றின் மீதான கடன்களை மீளச் செலுத்துவதன்மீது தீர்வொன்றை எட்டுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உதவுதல்.

1941ம் ஆண்டின் 39 ம் இலக்க கடன் இணக்க சபை கட்டளைச்சட்டத்தின் கீழ் இத் திணைக்களம் தாபிக்கப்பட்டது. இத் திணைக்களமானது காணி, நெல்வயல்கள், பெருந்தோட்டங்கள், வீடுகள் போன்ற அசைவற்ற ஆதனங்களின் உறுதியை நிபந்தனையுடன் பிணைவைத்து பெற்றுக்கொண்ட கடன்களின் மூலமும் சத்தியக்கடதாசி மற்றும் காசோலை போன்ற ஆவணங்களின்மீது பெறப்பட்ட பிணையற்ற கடன்களின் மூலம் ஏற்பட்ட கடன்சுமைக்கு உள்ளான மக்களுக்கு ஏதாவது நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.

1999ம் ஆண்டின் 29ம் இலக்க திருத்த சட்டம் கடன் கொடுக்கல் வாங்கல்களுக்காகவே எழுதப்பட்ட அறுதியுறுதிகளின் மீது இச்சபை இடையீடு செய்வதற்கு வழிவகுத்து இதன் நிவாரண உதவி நடவடிக்கைகளை மேலும் விரிவடையச் செய்துள்ளது.

இச் சபையின் செயற்பாட்டின் மூலம் கடன் கொடுத்தவர்களால் கடன்பட்டவர்கள் சுரண்டப்படுவதற்கு உள்ள சந்தர்ப்பங்கள் முடக்கப்படுகின்றன. சபையின் தலையாய நோக்கம் இது எனினும் கடன் கொடுத்தவர்களுக்கும் அநீதி ஏற்படுவதற்கு இடமளிக்காது. ஈட்டு உறுதிகளின் மீது மற்றும் நிபந்தனையுடனான அறுதியுறுதிகளின் மீது வைக்கப்பட்டுள்ள அசைவற்ற ஆதனங்கள் தொடர்பில் கடனாளிக்கு இலகுவானதும் கடன் கொடுத்தவர் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான நிபந்தனைகள் மீது அவ்வாதனங்களை மீட்டுக் கொள்வதற்கு உதவியளித்தல் இச்சபையின் நோக்கமாகிறது.

கடன் இணக்க சபையானது அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஐந்து (5) உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன் அவரில் ஒருவர் சபையின் தலைவராக அமைச்சரால் நியமிக்கப்படுவார். சபைக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு எந்தவித கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை. அத்துடன் இச்சபையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முத்திரைத் தீர்வை எதுவும் கிடையாது. வர்த்தமானி மற்றும் அறிவித்தல் கட்டணமாக ஒரு சிறிய தொகை மாத்திரமே அறவிடப்படுகிறது. ஆகவே கடன் சுமையால் பாதிக்கப்பட்ட சராசரி நபரொருவருக்கு மிகப்பெரிய சேவையொன்று வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர் சட்டத்தரணிகள் மூலம் தம்மை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியது கட்டாயமில்லாதிருப்பது பொதுமக்களுக்கு ஆறுதலாக உள்ளது.

இச்சபையின் நடைமுறை நீதிமன்ற நடைமுறையிலிருந்து வேறுபட்டது. இச்சபையில் எட்டப்படும் உடன்படிக்கைகள் கட்சிக்காரர்களினது இணக்கத்துடன் ஏற்படுதேயன்றி சபையின் பணிப்பின்மூலம் அமுல்படுத்தப்படுவதல்ல. அவ்வாறாயினும் நியாயமற்ற வட்டிகளை குறைப்பதற்கு சபையினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான முன்மொழிவுகளை கடன் கொடுத்தவர்கள் ஏற்றுக்கொள்ளாதுவிடின் அது தொடர்பாக கட்டளைச் சட்டத்தின் கீழ் கடனாளிக்கு சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்கும் சபைக்கு தத்துவங்கள் உள்ளன. அத்துடன் கடன் கொடுத்தவர் இறுதி விசாரணைக்காக வழங்கப்பட்ட அறிவித்தலின் படி விசாரணைக்கு சமூகமளிக்காவிடின் மறுகட்சியின்றி வழக்கு விசாரணை ஒன்றின் பின்னர் கடனாளிக்கு சான்றிதழ் ஒன்று வழங்கப்படுகின்றது. ஆயினும் அவ்வாறு செய்யப்படுவது பதிவு அஞ்சலில் அல்லது கிராம உத்தியோகத்தர் மூலம் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கடன்கொடுத்தவரிற்கு அறிவித்து கடன் கொடுத்தவர் வேண்டுமென விசாரணைக்கு சமூகமளிப்பதை தவிர்த்துக் கொள்கிறார் என சபை உணருமிடத்து மாத்திரமே இத்தகைய சந்தர்ப்பமொன்றில் அத்தகைய சான்றிதழ் ஒன்றை வழங்குவதனால் ஏற்படும் நன்மை கடனாளியைச் சேரும்.

நீதிமன்றத்தில் அந்ந விடயம் சம்பந்நமாக வழக்கு விசாரணை ஒன்று நடைபெறும் சந்தர்ப்பத்தில் இச் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் கடன் செலுத்துவதற்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்குவதற்கும் வட்டியை குறைந்த வட்டி விகிதமாக மாற்றுவதற்கும் கடன் இணக்க கட்டளைச்சட்டத்தின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

சேயலாளர்,
கடன் இணக்க சபைத் திணைக்களம்
இல. 35எ;இ,
ஆசார்ய.எந்.எம்.பெரேரா மாவத,
கொழுமுபு 08 .

சேயலாளர் : +94 112 697 910
அலுவலகம் : +94 112 697 911
+94 112 334 816
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

   View & Download
 Application For Relief Under the Debt Conciliation Ordinance  PDF
 Instructions to Complete the Application  PDF
 Functions of the Department of Debt Conciliation Board  PDF

சிறப்பு அறிவிப்பு