நோக்கு

அரச கொள்கைகளை சட்ட முறைமையொன்றாக பரிவர்த்தனை செய்வதற்காக  அரசாங்கத்திற்கு  உதவுவதனூடாக  நல்லாட்சியின்  பாதுகாப்பைப் பேணுதல்.

பணி

அரச கொள்கைகளை சட்ட முறைமையொன்றாக பரிவர்த்தனை செய்வதற்கு உதவும் பொருட்டு அரசியலமைப்புக்கு அமைவாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சட்டங்களை  வரைதல்.

அறிமுகம்

சட்டவரைஞர் திணைக்களத்தின் பிரதான பணியாவது அரசியலமைப்பு மற்றும் அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு அமைவாக பல்வேறு விடயங்கள் தொடர்பான அரச கொள்கைகளைச் சட்டங்களாக ஆக்குவதே ஆகும். புதிய சட்டங்களை விதித்தல் உளதாம் சட்டங்களை திருத்தஞ் செய்தல் மற்றும் பல அரச அமைச்சுகளிலிருந்து பெற்றுக் கொடுக்கப்படுகின்ற இடைச் சட்டங்களை மீள் நோக்குவதற்காக திணைக்களத்தினால் வரைவுகள் தயார் செய்யப்படுகின்றன. சட்ட மூலங்களின்  மீளாய்வுக்காக கூட்டப்படுகின்ற பாராளுமன்ற தெரிவுக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ளல், பாராளுமன்றத்தில் தோற்றுதல் மற்றும் சட்ட மூலங்கள் தொடர்பான விவாதங்கள் நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்துடன் கூட்டிணைப்பு அலுவல்களை மேற்கொள்ளல் என்பன இத்திணைக்களத்திற்கு உரித்தாக்கப்பட்டுள்ள ஏனைய செயற்பாடுகளில் உள்ளடங்குகின்றன. இத்திணைக்களம் அமைச்சுக்களின் கீழுள்ள அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டசபைகள் உட்பட சகல அரச அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சேவைகளை வழங்குகின்றது. நானாவித வரைவுகள் மற்றும் இடைச் சட்டங்களைத் தயாரித்தல் தொடர்பாக அரச அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சட்டமுறையான ஆலோசனைகளை பெற்றுக் கொடுப்பதும் இத்திணைக்களத்தால் செய்யப்படுகின்ற

விசேடித்த அமைப்பு முறையிலான கடமை நிகழ்ச்சித் திட்டமொன்று  இல்லாதிருப்பது இத் திணைக்களத்தின் விசேடித்த அம்சமாகிறது. அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படுவதனால் உத்தேச கொள்கைகளின் மீது, வழங்கப்பட்ட குறிப்பிட்டதொரு காலத்திற்குள் அரச அமைச்சுக்கள் மற்றும் அத்தகைய அமைச்சுக்களின் கீழுள்ள பல்வேறு திணைக்களங்களின் சட்டமுறையான தேவைப்பாடுகளின் மீது திணைக்களக் கடமை நிகழ்ச்சித் திட்டம் தயார் செய்யப்பட வேண்டியிருப்பது இந்நிலைக்கான காரணமாகிறது. இதன்படி திணைக்களத்தின் செயலாற்றறிக்கை தயார் செய்யப்படுவது குறித்துரைக்கப்பட்டதொரு ஆண்டு முழுவதிலும் சம்பந்தப்பட்ட சார்புடைய அமைச்சுக்களினால் சட்டங்கள் மற்றும் இடைச் சட்டத் திருத்தங்களுக்காக இத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுகோள் வெற்றிகரமாக பூர்த்தி செய்வதன் மீதே ஆகும். பூர்வாங்க அல்லது இடைச் சட்டங்கள் ஆகிய எவையாகினும் அவற்றை அந் நிறுவனங்களுக்கு விடுவிப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட சட்டக் காரணிகள் சம்பந்தமாக திணைக்களத்திற்கான சகல அம்சங்களும் மூன்று மொழிகளிலும் பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும்.

சிறப்பு அறிவிப்பு