2017 ஆம் ஆண்டில் இலங்கையில்  நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகளின் வெசாக் தின வைபவத்தின் முன்னேற்றத்தை ஆராய்ந்து பார்ப்பதற்காக ஐக்கிய நாடுகளின் வெசாக் தின சர்வதேசக் குழுவின் இரண்டாம் நாள் முன்னேற்ற மீளாய்வுக்  கூட்டம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடை​பெற்றது. அப்போது ​இலங்கை இவ்வைபவத்தை ஒழுங்கு செய்வதற்கு இதுவரை நிறைவேற்றிய பணியை கற்கை செய்து, ஒழுங்கு அலுவல்கள் பற்றிய ஐக்கிய நாடுகளின்  சர்தேச வெசாக்  தினக் குழுவின்  பூரண அங்கீகாரம்  கிடைக்கப் பெற்றுள்ளதென நீதி மற்றும் பௌத்த சாசன  அமைச்சு அறிவுறுத்துகிறது.

2017 மே மாதம்  12 ஆம்  திகதி  இந்திய  பிரதமர்  நரேந்திர மோடீ அவர்களினதும்  சனாதிபதி மைத்திரீபால  சிறிசேன  அவர்களினதும்  தலைமையில் ஆரம்ப வை​பவம் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு  மண்டபத்தில்  நடைபெறுவதுடன் Buddhist Teaching for Social Justice and  Sustainable peace”தொனிப் பொருளை அடிப்டையாகக் கொண்டு, இரண்டாம் நாள் பொருளாதாரம்  மற்றும்  பௌத்த தர்மம், கல்வி மற்றும் பௌத்த தர்மம், ஊடகம் மற்றும் பௌத்த தர்மம்  என்னும்  உபதொனிப் பொருள்களின் கீழ்  மாநாடுகள்  நடைபெறுகின்றன. இதன் இறுதிவைபவம்  சரித்திர புகழ் பெற்ற  கண்டி  ஶ்ரீ தலதா மாளிகையில்  நடைபெறும் என ஐக்கிய நாடுகளின் வெசாக்தினச் செயலகம் கூறுகிறது

நிகழ்வுகள் நாட்காட்டி