• நீதி நிருவாகத்திற்கான பொறிமுறை தொடர்பிலான கொள்கைகளையும் திட்டங்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் வகுத்தமைத்தல்.
 • குறித்த தேசிய நோக்கங்களை எய்தும் பொருட்டு தேசிய திட்டமிடல் அதிகாரிகளுடன் உடன்பட்ட கால வரையறையினுள்ளும் வரவுசெலவுத்திட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட வளங்களை விஞ்சாதவாறும் சொல்லப்பட்ட கொள்கைகள்  நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை செயற்படுத்தல்.
 • அரசியலமைப்பின் மூலம் வேறு ஒரு நிறுவனத்திற்கும் சாட்டப்பெறாத நீதி நிருவாகம் தொடர்பிலான அலுவல்கள்.
 • சமூகத்தின் தேவையையும் சர்வதேசத்தின் போக்கினையும் கருத்திற் கெண்டு சட்ட முறைமையில் மறுசீரமைப்பை செயற்படுத்தல்.
 • நீதிமன்ற முறைமைக்குள் நீதி நிருவாகத்தில் தாமதங்களைத் தடுத்தல் உட்பட ஒட்டுமொத்த நிருவாகம் தொடர்பாக எல்லா விடயங்களையும் முறையாகவும் செயற்திறனுடனும் செயற்படுத்தல்.
 • அரசாங்கத்தின் சார்பாக குற்றவியல் வழக்குகளைத் தொடுத்தலும் குடியியல் சட்ட நடவடிக்கைகளும்.
 • சட்ட வரைவு
 • யாதேனுமொரு தவறாளி மீது விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் மன்னிப்பளித்தல், குறித்த தண்டனையை மாற்றீடு செய்தல், தணித்தல், தாமதித்தல், இடைநிறுத்தல் ஆகியன தொடர்பில் ஆலோசனை வழங்கல்.
 • ஒட்டுமொத்த காதி நீதிமன்ற முறைமையின் பயனுறுதியையும் வினைத்திறனையும் மேம்படுத்தும் பொருட்டு தகுந்த வேலைத்திட்டமொன்றை வகுத்தமைத்தலும் செயற்படுத்தலும்.
 • தொழில் நியாயசபைகளை நிருவகித்தலும் அது தொடர்பான  ஏனைய அலுவல்களும்.
 • சட்டங்களை ஆவணப்படுத்தலும் ஒருங்கிணைத்தலும் கோவைப்படுத்தலும்.
 • சட்டச் சொற்றொகுதிகளை தயாரித்தல்.
 • சட்ட அறிக்கைகளை வெளியிடல்.
 • அமைச்சின் கீழ் வரும் திணைக்களங்கள்/ நிறுவனங்களைக் கண்காணித்தலும் இத் திணைக்களங்கள்/ நிறுவனங்களின் கீழ் வரும்  ஏனைய எல்லா விடயங்களும்.
 • குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும்  சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான விடயங்கள்
  • இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலையச் சட்டம் (2000 இல. 44)  தொடர்பான விடயங்கள்

நிகழ்வுகள் நாட்காட்டி