சட்டப்பிரிவு

நீதி நிர்வாகத்திற்கு ஏற்புடைய சட்டங்களுக்கான கொள்கைகளை தயார் செய்தல், சட்ட அறிக்கைகளை வெளியிடல் மற்றும் சட்ட உதவிகளை வழங்கல். குற்றவியல், குடியியல், மற்றும் வர்த்தக விடயங்களில் பரஸ்பர உதவி மற்றும் சர்வதேச ரீதியில் பிள்ளைகளைக் கடத்தலில் குடியியல் சம்பந்தமான விடயங்கள் போன்றவற்றில் மத்திய அதிகாரியாக இருத்தல். தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை மாறுதலின் கீழ் மறியற்காரர்களை ஒப்படைத்தல், சட்டவாக்கத்தயாரிப்பு பற்றிய அமைச்சரவைத் துணைக் குழு மற்றும் மன்னிப்பு வழங்கப் பரிந்துரைத்தல்.

தாபனப்பிரிவு

நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க அலுவலர்களைத் தவிர்ந்த அமைச்சினதும் திணைக்களங்களினதும் அலுவலர்களின் தாபன அலுவல்கள்.

அபிவிருத்தி பிரிவு

அபிவிருத்தி பிரிவானது நீதி அமைச்சினதும் அதன் கீழ் வரும் திணைக்களங்களினதும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்கின்றது.

உட்கட்டமைப்புப்பிரிவு

நீதிமன்றங்கள், நீதிபதிகளின் அலுவலக வாசஸ்தலங்கள், தொழில் நியாய சபைகள், மற்றும் அமைச்சின் ஏனைய கட்டிடங்களை நிர்மாணித்தல் மற்றும் அவற்றிற்கு பகுதிகளை சேர்த்தலும் மேம்படுத்தலும்.

கணக்குகள் பிரிவு

அமைச்சினதும் அதன் கீழுள்ள திணைக்களங்களினதும் நிதித்திட்டமிடலும் முகாமைத்துவமும் நிதிக்கட்டுப்பாடும்.

உள்ளகக் கணக்காய்வுப்பிரிவு

அமைச்சினதும் அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களினதும் நீதிமன்றங்களினதும் கணக்குகளின் கணக்காய்வு.

திட்டமிடற்பிரிவு

அமைச்சினதும் அதன் கீழுள்ள திணைக்களங்களினதும் கருத்திட்டங்களை திட்டமிடலும் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை கண்காணித்தலும் சீரமைத்தலும்.

நிகழ்வுகள் நாட்காட்டி