அறிமுகம்

சட்டத்தரணிகள் குழாமில் தமது பெயரை உட்படுத்திக்கொள்வதற்கு விரும்புகின்றவர்களுக்கு நடாத்தப்படுகின்ற சட்டக்கல்வியை முகாமைத்துவம் செய்வதை, 1900ம் ஆண்டின் 2ம் இலக்க சட்டக் கல்விப் பேரவையின் சட்டத்தின் பிரகாரம் இலங்கை சட்டக்கல்லூரி கொண்டுள்ளது. சட்டக் கல்விப்பேரவை, பிரதம நீதியரசர் (தலைவர்), சட்டமாஅதிபர், இரண்டு உயர் நீதிமன்ற நீதியரசர்கள், நீதி அமைச்சின் செயலாளர், மன்றாடியார், சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்மொழியப்பட்ட இரண்டு அங்கத்தவர்கள் நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஆறு அங்கத்தவர்கள் ஆகியோர்களினால் அமையப்பெற்றுள்ளது.

மூன்றரை வருட கால பாடத்திட்டத்தை சட்டக்கல்லூரி கொண்டுள்ளது. ஒவ்வொரு வருட இறுதியிலும் மற்றும் ஏப்ரல் மாதத்திலும் கல்லூரி, முதன்மை நிலை, இடை நிலை, இறுதி நிலை   மாணவர்களுக்கு பரீடசைகளை நடாத்துகின்றது. இந்தப் பரீட்சைகளை நிறைவு செய்ததன் பின்னர் இவர்கள், குறைந்தது எட்டு வருட கால அனுபவத்தினைக் கொண்ட சட்டத்தரணி ஒருவரிடத்தில் ஆறு மாத காலம் பயிலுனராக சேவை செய்தல் வேண்டும்.

இலங்கை சட்டக் கல்லூரி ஒரு சுயவருமான தாபனமாகும். சட்டத்தரணிகள் தொழிலில் ஈடுபடும் சட்டத்தரணிகளாலும் சட்டத்தரணிகளாக தாபனங்களில் சேவையாற்றும் வருகை தரும் விரிவுரையாளர்களினாலும் விரிவுரைகள் நடாத்தப்படுகின்றன. கல்வித்தரத்தில் சிறந்த இவர்கள் அனைவரும் ஜனாதிபதி சட்டத்தரணிகளாகவோ அல்லது தேர்ச்சிமிக்க சட்டத்தரணிகளாகவோ இருப்பர்.

இல 244, புதுக்கடை வீதி,
த.பெ. இல 1501,
கொழும்பு 12.

+94 112 473 119/ 323759
+94 112 385 847

இலங்கை சட்டக் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக

நிகழ்வுகள் நாட்காட்டி