இலங்கை நீதிபதிகள் நிறுவனமானது 1985ம் ஆண்டு 46ம் இலக்க சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் கௌரவ பிரதம நீதியரசர் மற்றும் அதமேதகு சனாதிபதியினால் நியமிக்கப்படும் இரு உயர்நீதிமன்ற நீதியரசர்களை உள்ளடக்கிய 5 உறுப்பினர்களைக் கொண்ட முகாமையாளர் சபையினால் நிருவகிக்கப்படுகிறது. இந் நிறுவனத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கங்கள்  அமைச்சினால் ஒதுக்கப்படுகிறது.

விடயங்களும் பணிகளும்:-

  • நீதித்துறை அலுவலர்களுக்கு நீதித்துறை மற்றும் சட்டம் சம்பந்தமாக தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கு வசதி செய்தல்.
  • நீதித்துறை அலுவலர்கள் தமது தொழில்சார் நிபுணத்துவத்தை விருத்தி செய்வதற்கும் தமது அறிவையும் திறமைகளையும் விருத்திசெய்வதற்கும் கூட்டங்கள், மகாநாடுகள், விரிவுரைகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்கு செய்தல்.
  • நீதி நிருவாகம் சம்பந்தமான பலதரப்பட்ட விடயங்களில் ஆராய்சிப் பாடநெறிகளை நடாத்துவதுடன் நீதித்துறை அலுவலர்களுக்கு  நூலக வசதிகள் மற்றும் கல்வி சம்பந்தமான பொருட்களை வழங்குதல்.
  • நீதிதுறை அலுவலர்களுக்கு நூலக வசதிகளையும் ஏனைய கல்வி சார் பொருட்களையும் வழங்குதல்.

இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக

நிகழ்வுகள் நாட்காட்டி