நோக்கு

"அரசு சாரா ஊழியர்களின் வேலைப் பாதுகாப்புக்க்கான உத்தரவாதம்"

செயற்பணிகள்

“விரைவானதும், நீதியானதும், திறமையான நிர்வாகத்தின் மூலமும் ஆற்றல் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களின்  உதவியுடனும் அரசு சாரா ஊழியர்களின் வேலைப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தல்”

அறிமுகம்

1950ம் ஆண்டின் 43ம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் 31 (ஆ) பிரிவின் பிரகாரம் பெறப்படும் பிணக்குகளை விசாரித்து கையுதிர்வு செய்தல் தொழில் நியாய சபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பிரதான பணியாகும். அரசு சாரா நிறுவனங்களில் ஊழியர்களை வெளியேற்றுதல், போன்ற சம்வங்களின்போது நீதியை பெற்றுக்கொடுக்கும் நிறுவனமென தொழில் நியாய சபையை வரையறை செய்யலாம் என்பதுடன் இது அத்தகைய திறத்தினருக்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். தொழில் நியாய சபை தலைமை அலுவலகத்தின் கீழ் 39 தொழில் நியாயசபைகள் செயற்படுகின்றன. அவை கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு - 06 கண்டி - 01 அவிஸாவளை - 01 பலாபத்வெல - 01
இரத்மலானை - 01 நாவலப்பிட்டிய - 01 கடுவெல - 01 மகரகம     - 01
ஹற்றன் - 01 தலவாக்கலை - 01 வத்தளை - 01 நுவரெலியா - 01
கம்பஹா - 01 பதுளை - 01 நீர்கொழும்பு - 02 பண்டாரவளை - 01
பாணந்துறை - 01 அம்பாறை - 01 களுத்துறை - 01 மட்டக்களப்பு - 01
காலி - 01 திருகோணமலை - 01 மாத்தறை - 01 சிலாபம் - 01
கொட்டபொல - 01 அனுராதபுரம் - 01 இரத்தினபுரி - 01 குளியாபிட்டிய - 01
கேகாலை - 01 பலாங்கொடை - 01 குருநாகல்  - 01 எம்பிலிபிட்டிய 01 
யாழ்ப்பாணம் 01      

தொழில் நியாய சபைகளைப் பேணுவதற்குத் தேவையான மனிதவளங்கள், கூட்டு வளங்கள் மற்றும் நிதிவளங்கள் ஆகியவற்றை வழங்குதலும் முகாமைசெய்தலும் தொழில் நியாய சபைகளின் தலைமை அலுவலகத்தின் பிரதான பணிகளாகும். அதன்பிரகாரம் தொழில் நியாய சபை தவிசாளர்கள் தவிர்ந்த ஏனைய எல்லா அலுவலர்களினதும் தாபன மற்றும் நிருவாக பணிகள் மற்றும் தொழில் நியாய சபை தவிசாளர்கள் உட்பட எல்லா அலுவலர்களினதும் வேதனம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் உட்பட எல்லா நிதி முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டுப் பணிகளும் தொழில் நியாய சபைகள் தலைமை அலுவலகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

நிகழ்வுகள் நாட்காட்டி