சட்ட உதவி ஆணைக் குழுவானது, 1978 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க சட்ட உதவி சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டது. ஏழ்மையின் காரணமாக நீதியின் அனுசரணையைப் பெற்றுக் கொள்ள இயலாத இலங்கையின் ஏழை எளிய மக்களுக்கு சட்ட உதவி வழங்குவது இதன் பிரதான குறிக்கோளாகும். குறைந்த வருமானமுடைய மக்களுக்கு இலவசமாக சட்டத்தரணிகளின் உதவியை பெற்றுக் கொடுப்பது, முழு சமூகத்துக்கும் சட்டத்தைப் பற்றிய அறிவூட்டுதல், புதிய சட்ட உருவாக்கத்திலும் சட்ட மீளமைப்பிலும் அரசாங்கத்திற்கு  ஆலோசனை வழங்குதல் என்பன இதன் அடிப்படைச் செயற்பாடுகளாகும்.

சட்டப் பிரிவு

  1. நீதியின் அனுசரணையைப் பெற்றுக் கொள்ள இயலாதவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராவது.
  2. எவருக்கும் இலவசமாக சட்ட ஆலோசனை வழங்குவது.
  3. புதிய சட்ட உருவாக்கத்திலும் சட்ட மீளமைப்பிலும் அரசாங்கத்திற்கு  ஆலோசனை வழங்குவது.

தலைமைக் காரியாலயத்தின் கீழ் நேரடியாகச் செயற்படும் கொழும்பு சட்ட உதவி மத்திய நிலையம் உள்ளடங்கலாக 77 பிரதேச சட்ட உதவி அலுவலகங்கள் இயங்குகின்றன. நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளின் போது பிரிவு கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெறப்படும் வருமான அறிக்கை கவனத்திற் கொள்ளப்படுமாயினும், தாபரிப்பு வழக்குகளில் அது கருத்திற் கொள்ளப்படுவதில்லை.

இலங்கை சட்ட உதவிகள் ஆணைக்குழு
இல 129, புதுக்கடை வீதி,
கொழும்பு - 12,
இலங்கை.

+94 115 335 329/ +94 115 335 281
+94 112 433 618
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இலங்கை சட்ட உதவிகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக

நிகழ்வுகள் நாட்காட்டி