நோக்கு

நன்கொடையாளர்கள் மற்றும்  அல்லது  கருணை நம்பிக்கை நிதியங்கள்  அல்லது  ஆஸ்திகள் (பணம் மற்றும் அல்லது  சொத்து) என்பனவற்றின் உரிமையாளர்கள்  சட்ட வரம்புக்குள் அமைந்த  தங்களது இறுதி விருப்புகளை கடைபிடிக்க பயனாளிகளின் மிகச் சிறந்த பயனுக்காக அல்லது பொதுமக்களுக்காக நிதியம் பொது நம்பிக்கையாளருக்கு வழங்கப்படுகின்றது என்பதை  நிச்சயப்படுத்திக்கொள்ளல்.

குறிக்கோள்

பயனாளிகள் அடங்கலாக ஆஸ்திகளுக்கு கட்டுப்பட்ட எல்லா சம்பந்தப்பட்ட தரப்பினர்களை திருப்திபடுத்தும் ஒரு நோக்கத்திற்காக இந்த திணைக்களத்திற்கு பாதுகாப்பிற்காக ஒப்படைக்கப்பட்ட இறந்த நபரது நிதியங்கள் மற்றும்  ஆஸ்திகளின் நிர்வாகத்தை திணைக்களத்தின் திறன்கள் மற்றும் வளங்கள் மூலமாக சிறந்த சேவையை  வழங்குவதாகும்.

கடமைகள்

பொது நம்பிக்கை பொறுப்பாளர் கட்டளைச் சட்டம், குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவை, நீதிமன்ற அமைப்பு முறை சட்டம் மற்றும் வேறு எழுத்து மூல விதிகளின்படி கீழ் காணப்படும் கடமைகள் பொதுநம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 • சாதாரண நம்பிக்கைப் பொறுப்பாளர், பாதுகாப்பு வழங்கும் நம்பிக்கைப் பொறுப்பாளர் அல்லது பாதுகாப்பான நம்பிக்கைப் பொறுப்பாளராக செயற்படுதல்.
 • சொத்து திரட்டல் கட்டளையின் கீழ் சொத்து திரட்டல்.
 • பராயமடையாத ஒருவரின் சொத்து நம்பிக்கைப் பொறுப்பாளராக அல்லது உதவு நண்பனாக (பாதுகாப்பு முகாமையாளராக) செயற்படுதல். (மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில்)
 • மனவளர்ச்சி குன்றிய நபரின் சொத்து முகாமையாளராக செயற்படுதல் (மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில்)
 • அசையா சொத்தின் ஒப்பந்த முகாமையாளராக செயற்படுதல்.
 • (பாதுகாப்பு நம்பிக்கைப் பொறுப்பாளராக செயற்படும் போது அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட 'நம்பிக்கைச் சபையால் காலத்திற்கு காலம் எடுக்கப்படும் தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு மட்டும் பாதுகாப்பு நம்பிக்கைப் பொறுப்பாளர் பிணிக்கப்படுகின்றார்.)
 • வெளிநாட்டிலுள்ள இலங்கையர் ஒருவருக்கு அற்றோனிதத்துவகாரராக அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய பணத்தைப் பெற்றுக் கொள்ள அல்லது செலுத்த நடவடிக்கை எடுத்தல்.
 • குடியியல் நடைமுறைச் சட்டக் கோவையின் ஏற்பாடுகளின் கீழ் நீதிமன்றினால் சொத்து சம்பந்தமாகவும் மற்றும் வேறு விடயம் சம்பந்தமாகவும் செயற்படுதல்.
 • நீதிமன்றம் கையேற்கும் சந்தர்ப்பத்தில் மரணசாதனமற்ற நபரின் நிருவாகியாக செயற்படுதல்
 • நீதிமன்ற அமைப்பு முறை சட்டத்தின் கீழ் சொத்து சேகரிப்பாளராக செயற்படுத்தல்.
 • குற்றம் புரிந்தமைக்காக சிறையிலிடப்பட்டுள்ளவரின் சொத்துக்கு முகாமையாளராக செயற்படுதல்.
 • எந்தவொரு தனிப்பட்ட நபரின் மரணசாதன பத்திரத்திற்கு பாதுகாப்பாளராக செயற்படுதல்.
 • விகாரைக்குரிய சொத்துக்களின் பொறுப்பாளராக செயற்படுதல்.

மேற்குறித்த கடமைகளை விட வேறு விடயங்களில் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் தலையீடுகள்

பொது நம்பிக்கை பொறுப்பாளர் கட்டளைச் சட்டத்தின் பின் ஏற்படுத்தப்பட்ட திருத்தங்களுக்கு அமையவும் வேறு எழுத்துமூல விதிகளுக்கு அமையவும் வழங்கப்பட்டுள்ள வேறு கடமைகள்.

 • 1988 ம் ஆண்டின் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் கட்டகைச்சட்டத்தின் 10 (அ) பிரிவிற்கு அமைய பணிபுரிவதற்காக வெளிநாட்டில் இருப்போர், வெளிநாட்டில் இருக்கும் போது மரணித்தால் அவர்களுக்காக வழங்கப்படும் நட்டஈடு தங்கிவாழ்பவர்களுக்கும் அல்லது சட்டப்படியான வாரிசுகளுக்கிடையே பங்கீடு செய்யும் செயற்பாட்டை சரியான முறையில் பிழையின்றி நடாத்துவது மற்றும் அக் கடமையை இலகுபடுத்தும் முகமாக சம்பந்தப்பட்ட பணிபுரிபவர்களை பதிவு செய்தல்.
 • 1944 ம் ஆண்டின் 42 ஆம் இலக்க விகாரையின் காணி (நட்டஈடு) கட்டளைச் சட்டத்தை செயற்படுத்தல்.
 • 1981ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பௌத்த விகாரை தேவாலகம சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கடமைகளை புரிதல்.
 • 1973 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க ஐக்கிய புதினப் பத்திரிகை நிறுவனத்தில் உள்ள பங்குகளுக்கு அரசின் சார்பில் நம்பிக்கைப் பொறுப்பாளராக செயற்படுதல்.

  இல 02, புல்லர்ஸ் ஒழுங்கை
கொழும்பு 07,
இலங்கை.

+94 112 581 690
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக

நிகழ்வுகள் நாட்காட்டி