1969ம் ஆண்டின் 03ம்இலக்க இலங்கை சட்டஆணைக்குழு சட்டத்தின் மூலம் இலங்கை சட்ட ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. இது சட்ட மறுசீரமைப்பை மேற்கொள்ளும் பிரதான அரசாங்க நிறுவனமாகும். சட்ட ஆணைக்குழு திணைக்களத்தின் பிரதான பணி தேவையான நிருவாக மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்குவதாகும்.

நோக்கு

நல்லாட்சிக்காக சட்ட மறுசீரமைப்பை மேம்படுத்தல்.

செயற்பணிகள்

சட்ட மறுசீரமைப்பை மேம்படுத்துவதற்காக சட்ட ஆணைக்குழுச் சட்டத்தால் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்ட மற்றும் விதிக்கப்பட்ட பணிகளை அமுல்படுத்தல்.

நோக்கமும் தொழிற்பாடுகளும்

சட்ட ஆணைக்குழுவின் பிரதான நோக்கம் சட்ட மறுசீரமைப்பை விருத்திசெய்வதாகும். அதற்காக சட்டஆணைக்குழு பின்வரும் பணிகளை ஆற்றுகிறது.

 • சட்டத்தை குறியீடு செய்தல்.
 • முரண்பாடுகளை ஒழித்தல்.
 • சட்டத்தை முறையாக அபிவிருத்தி செய்து மறுசீரமைப்பதற்காக பொருள் அளவிலானதும் நடவடிக்கைமுறை சார்ந்ததுமான சட்டத்தை மீளாய்வு செய்தல்.
 • வழக்​கொழிந்த மற்றும் அனாவசியமான சட்டங்களை அகற்றுதல்.
 • சட்டத்தை எளிதாக்குதலும் நவீனமயப்படுத்தலும்.
 • சட்டத்தை மறுசீரமைப்பதற்காக எவ்வாறான பிரேரணைகளையும் பெற்று பரிசீலித்தல்.
 • மறுசீரமைப்பதற்காக காலத்திற்குகாலம் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளை ஆராய்வு செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரித்து அமைச்சருக்கு வழங்குதல்.
 • ஏனைய நாடுகளின் சட்டமுறை சம்பந்தமான தகவல்களை பெறல்.
 • துணைச் சட்டவாக்கங்கள் நன்கு ஏற்றுக்கொண்ட கோட்பாடுகளுக்கும் சட்டத்திற்கும் இயைபானதென்பதை, பாதுகாக்கும் எண்ணத்துடன் பாராளுமன்றம் அல்லாத வேறு சபைகளால் துணைச் சட்டங்களை ஆக்கும் அதிகாரத்தை அமுல்படுத்துவதை நிரந்தரமாக மீளாய்வு செய்தல்.
 • வழக்காடுதல் சம்பந்தப்பட்ட நிருவாகத் தன்மையின் நடவடிக்கை முறை உட்பட சட்ட நடவடிக்கை முறைகளை பகுத்தறிவு செய்தல் மற்றும் இலகுபடுத்துவதற்காக நிகழ்ச்சித் திட்டங்களை முறையாகத் தயார் செய்தல்.
 • சிங்களம், தமிழ் ஆங்கிலம் ஆகியமொழிகளில் சட்டத்தை  குறியீடுசெய்வதற்கு நிகழ்ச்சித் திட்டங்களைத் தயார் செய்தல்.

செயலாளர்
இலங்கையின் சட்ட ஆணைக்குழு
4 வது மாடி,
நீதி அமைச்சின் புதிய கட்டிடம்
இல 80, அதிகரன மாவத்தை,
கொழும்பு 12.

+94 112 333 884
+94 112 333 884
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இலங்கை சட்ட ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக

நிகழ்வுகள் நாட்காட்டி