நோக்கு

நியாயமான சட்டத்தை மதிக்கின்ற சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்.

செயற்பணிகள்

நீதிமன்றங்கள், சட்டத்தை அமுல்படுத்துகின்ற நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சட்ட மருத்துவ, மற்றும் உணவு விஞ்ஞானம் பற்றிய பகுப்பாய்வு, அறிவுரை மற்றும் மதியுரை சேவைகளை வழங்குதல்.

செயற்பாடுகள்

இலங்கையிலுள்ள ஒரேயொரு சட்ட ஆய்வுகூடமான அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் உணவு விஞ்ஞானப்பிரிவு, தடயவியல் விஞ்ஞானப்பிரிவு ஆகிய இரு பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது. உணவு விஞ்ஞானப் பிரிவானது உணவு, மதுபானம், பால் மற்றும் நீர் ஆகிய நான்கு ஆய்வுகூடங்களை உள்ளடக்கியுள்ளது. தடயவியல் விஞ்ஞானப் பிரிவானது எறிபடை தடயவியல் பிரிவு, நீர்ப்பாய தடயவியல் மற்றும் DNA பிரிவு, நச்சு தடயவியல் பிரிவு, வெடிபொருட்கள் மற்றும் தீ புலனாய்வுப் பிரிவு, போதைப் பொருள் தடயவியல் பிரிவு, சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் தடயவியல் பிரிவு, மற்றும் நானாவித தடயவியல் பிரிவு ஆகிய ஏழு துறைகளைக் கொண்ட 11 உப பிரிவுகளைக் கொண்டுள்ளது.

அறிவுரைகள் ஆலோசனைகள் மற்றும் விஞ்ஞான சேவைகள் வழங்குவதன் மூலம் இது சேவை வழங்கும் ஒரு திணைக்களமாவதுடன் நீதிமன்றங்கள், பொலிஸ், சுங்கத் திணைக்களம், மதுவரி திணைக்களம், துறைமுகங்கள், உள்ளுராட்சி நிறுவனங்கள், சுகாதாரம், பிற அரசாங்க திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் இருந்துபெறப்படும் சான்றுப் பொருட்களை விஞ்ஞான பரிசோதனை மற்றும் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கைகளை வழங்குகிறது. இதற்கு மேலதிகமாக பல்வேறு அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அரசாங்க அனுசரணை பெறுகின்ற நிறுவனங்களின் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற உணவுகள், மதுபானங்கள், பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு அலுவல்களுக்காக பரிசோதனை செய்யப்படுவதுடன் இலங்கை சுங்கத்தால் ஆற்றுப்படுத்தப்படுகின்ற மாதிரிகள் தரம் மற்றும் சுங்கவரி வகைப்படுத்தலுக்காக பரிசோதனை செய்யப்படுகின்றன. மேலும்  நாடு முழுவதிலுமுள்ள நீதிமன்றங்களால் சமர்ப்பிக்கப்படுகின்ற சந்தேகத்திற்குரிய ஆவணங்களை பரிசோதனை செய்து அறிக்கையிடுதலும் இத் திணைக்களத்தின் மூலம் செய்யப்படுகின்றது.

பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்படும் சான்றுப் பொருட்கள் அல்லது மாதிரிகள், உணவு மற்றும் மருந்துகள் சட்டம், தேசிய சுற்றாடல் சட்டம், மதுவரிக் கட்டளைச் சட்டம், புகையிலை மற்றும் மதுபான தேசிய அதிகாரசபை சட்டம், ஒப்பனைப் பொருட்கள் அவுடதங்கள் மற்றும் சாதனங்கள் சட்டம், பீடைகொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டம், சுடுகலன் கட்டளைச் சட்டம், விசம், அபின் மற்றும் அபாயகர ஒளடத சட்டம், வெடிபொருள் சட்டம், தீங்கு விளைவிக்கும் ஆயத சட்டம், மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை, குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை, சான்றுகள் கட்டளைச்சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் மற்றும் கட்டளைச்சட்டங்களின் கீழ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை வழங்குதல் இத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக பிற அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு பெறுகின்ற நிறுவனங்களிற்கு தேவைப்படும் சந்தர்ப்பங்களில்  விஞ்ஞான மதியுரைஞராகவும் இத்திணைக்களம் செயலாற்றுகிறது. விசேஷமாக, இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு தரத்தை உருவாக்குவதில் இந்நிபுணர்களின் பங்களிப்பு முக்கயமானதாகும். இந்நிபுணர்கள் பாதுகாப்பு அமைச்சின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவிற்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க உதவிபுரிகின்றனர்.

இத் திணைக்களம் 2013 மே மாதம் முதல் பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடமொன்றிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அத்தியாவசியமாகத் தேவைப்படும் டீ.என்.ஏ. ஆய்வுகூடமென்று தேவையான எல்லா உபகரணங்களுடனும் இவ்வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற சான்றுப்பொருட்களின் பகுப்பாய்வு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்திணைக்களம் குருநாகலில் மாகாண ஆய்வுகூடமொன்றை நிறுவியுள்ளது.

இல 31, இசுறு மாவத்தை,
பெலவத்த,
பத்தரமுல்ல.

+94 112 176 800 / +94 112 786 395
+94 112 786 394
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக

நிகழ்வுகள் நாட்காட்டி