நோக்கு

இலங்கைக்காகவும் அங்கு வாழ்கின்ற சகல மக்களுக்காகவும் நீதியையும் நியாயத்தையும் நிறைவேற்றுவதற்காக பயனுள்ளவாறு பதிலளிக்கும் செயற்பாட்டின் முன்னோடி அரச நிறுவனமாக செயல்படுதல்.

பணி

 • இலங்கையின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வதற்காக மதிப்புடனும் அபிமானத்துடனும் நேர்மையாகவும் செயலாற்றுதல் மற்றும் எம்மால் இயன்றளவில் இலங்கை மக்களுக்கு சேவை செய்தல்.
 • சமுதாய மற்றும் பொருளாதார சுபீட்சம், சம சந்தர்ப்பங்கள் மற்றும் மனிதநேயத்தை ஊக்குவிக்கும் முயற்சியின் போது இலங்கை மக்களுக்காக நீதி, பாதுகாப்பு மற்றும் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்காக பாரபட்சமின்றியும் நீதியாகவும் இலங்கையின் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிக்கும்.

நோக்கம்

 • இலங்கை அரசாங்கம், அரசாங்க நிறுவனங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளுக்காகத் தேவையான சகல சட்ட முறையான சேவைகள் மற்றும் சட்ட  ஆலோசனைகளை உடனடியாக வழங்கல் மற்றும் அரசாங்கத்தின்  விரிவான குறிக்கோள்களை விஸ்தரிப்புச் செய்யும் செயற்பாட்டின் போது விசேடித்த பணியொன்றை நிறைவேற்றுதல்.

சட்டமா அதிபர், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு சார்பாக தோன்றும் தலைமைச் சட்ட ஆலோசகர் என்பதுடன் திணைக்களத்தின் தலைவராகவும் பொறுப்புக் கூறும் உத்தியோகத்தராகவும் கடமையாற்றுகின்றார். சட்டமா அதிபர் திணைக்களமானது 'ஏ' வகுப்பு திணைக்களம் என்பதுடன் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2015.09.21 ஆம் திகதிய 1993/13 ஆம் இலக்கம் கொண்ட வர்த்தமானி பிரகடனத்தின் பிரகாரம் நீதி அமைச்சின் கண்கானிப்பின் கீழ் வருகின்றது.

சட்டமா அதிபர் திணைக்களமானது, மத்திய அரசு, மாகாண சபைகள், அரச திணைக்களங்கள், நியதிச் சட்டச் சபைகள் மற்றும் அரச பங்களிப்பு நிறுவனங்களுக்கு சட்ட உதவியை வழங்கி வருகின்றது. திணைக்களத்தின் சட்ட உத்தியோகத்தர்கள், சிவில், குற்றவியல், அரசியலமைப்பு மற்றும் வர்த்தக விடயங்களில் அரச மற்றும் அரச சார்பான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதுடன் இலங்கையிலுள்ள உயர் நீதிமன்றம் ஏனைய நீதிமன்றங்கள் தொழில் நியாய சபைகள் என்பவற்றில் தொடரப்பட்ட வழக்குகளில் அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்கள் சார்பாகத் தோன்றுவர்.

சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்காக திணைக்களத்தில்  முறையே சிவில் பிரிவு குற்றவியல் பிரிவு மற்றும் அரச சட்டத்தரணிகள் பிரிவு ஆகிய மூன்று அலகுகள் தாபிக்கப்பட்டுள்ளதுடன் நிருவாக செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தாபனப் பிரிவும் கணக்குப் பிரிவும் தாபிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேற்கூறப்பட்ட அலகுகளுக்கு மேலதிகமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் முறையாக நடைபெறுவதற்கு கூட்டுத்தாபனப் பிரிவு, மேலதிக அவசரகால சட்டத்தின் கீழ் கடமைகளை மேற்கொள்ள மேலதிக அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழான பிரிவு, சிறுவர் துஷ்பிரயோக வழக்குப் பிரிவு, குடிவரவு மற்றும் குடியகல்வுப் பிரிவு, பொதுமக்கள் மனுப் பிரிவு மற்றும் உயர்நீதிமன்ற அலகு ஆகியன தாபிக்கப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடமைகள்

 • சிவில், குற்றவியல், அரசியலமைப்புச் சட்டம், வர்த்தகம் போன்ற விடயங்கள், சர்வதேச சட்ட நடவடிக்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் என்பன தொடர்பாக அரசாங்கத்திற்கும் அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கல்.
 • உயர் நீதிமன்றம் ஏனைய நீதிமன்றங்கள் மற்றும் தொழில் நியாய சபைகளில் தொடரப்பட்ட வழக்குகளில் அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தல்.
 • புதிய சட்டங்களை சட்டவாக்கம் செய்யும் போதும் நடைமுறையிலுள்ள சட்டங்களைத்  திருத்தும் போதும் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குதல்.

சட்ட உத்தியோகத்தர்கள் மேற்கூறப்பட்ட கடமைகளை மேற்கொள்வதற்கு திணைக்களத்தின் பின்வரும் பிரிவுகள் உதவுகின்றன.

 • குற்றவியல் பிரிவு
 • சிவில் பிரிவு
 • அரச சட்டத்தரணிகள் பிரிவு
 • உயர் நீதிமன்றப் பிரிவு
 • கூட்டுத்தாபனப் பிரிவு

மேலும் திணைக்களத்தின் தங்குதடையின்றிய செயற்பாடுகளுக்கு சிறப்பாக இனங்காணப்பட்ட பொறுப்புக்களையுடைய சிறப்புப் பிரிவுகள் உள்ளன.

அவையாவன,

 • பொதுமக்கள் மனு அலகு (இப் பிரிவு மக்கள் மனுக்கள் தொடர்பில் வழக்குகளை கையாளும்)
 • சிறுவர் துஷ்பிரயோக வழக்குப் பிரிவு (இப் பிரிவு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை கையாள்வதற்கு தாபிக்கப்பட்டுள்ளது)
 • மே.அ.ஒ பிரிவு (இப்பிரிவு மேலதிக அவசரகால ஒழுங்கு விதிகள் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளைக் கையாளும்)
 • குடிவரவு மற்றும் குடியகல்வுப் பிரிவு (இப்பிரிவு, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைக் கையாளும்)

மேற்கூறப்பட்ட பிரிவுகளும் அலகுகளும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் முக்கிய செயற்பாடுகளை கையாளுகின்றன. அத்துடன் இத்திணைக்களத்தின் நிருவாக நடவடிக்கைகளுக்காக கணக்குப் பிரிவும் தாபனப் பிரிவும் தாபிக்கப்பட்டுள்ளன.

த.பெ.இல 502, புதுக்கடை,
கொழும்பு 12,
இலங்கை.

+94 112 147 888
+94 112 436 421
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக

நிகழ்வுகள் நாட்காட்டி