பிரதான பணிகள்

  1. சத்தியபிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்களாகப் பரிந்துரைப்பதற்கு சத்தியபிரமாண மொழிபெயர்பாளர் பரீட்சைகளை நடத்துதல்.
  2. மொழிபெயர்ப்பு சரியென உறுதிப்படுத்துகிற சத்தியபிரமாணம்செய்த மொழிபெயர்ப்பாளர்களைப் பதிவுசெய்து அதிகாரமளித்தல்.

சத்தியபிரமாணம்செய்த மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பதற்கான எழுத்துப் பரீட்சை

சத்தியபிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்கள் நியமனத்தை அடுத்து, நீதி அமைச்சு மாவட்ட நீதிமன்றங்களின் மாவட்ட நீதிபதிகளுக்கு அவர்களின் நியாயாதிக்க பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவதற்குப் பரிந்துரைசெய்கிறது. சத்தியபிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்களின் கடமைகளில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை வேண்டப்படும் மொழியில் மொழிபெயர்த்தல், தேவைப்பட்டால் அந்த ஆவணங்களை நீதி மன்றங்களில் சமர்ப்பிப்பதற்காக சத்தியபிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்கள் சான்றுப்படுத்திக்கொடுத்தல் என்பவை உள்ளடங்குகின்றன. அதற்கு அமைவாக, சிங்களம், தமிழ், ஆங்கிலம், அரபு, ஹிந்தி, ஜப்பான் மற்றும் தற்கால தேவைகளுக்கு ஏற்றவகையில் மொழிகளில் சத்தியபிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்களை அமைச்சு பரிந்துரைசெய்கிறது. மேலும், சில ஆவணங்களுக்கு சத்தியபிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்கள் சான்றுப்படுத்த வேண்டும் என பொதுமக்களிடம் கோரப்படுகின்றபோது அந்த ஆவணங்களை சத்தியபிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்து சான்றுப்படுத்துகின்றனர். 

தகைமைகள்

சிங்களம், தழிழ், ஆங்கிலம் மற்றும் அரபு போன்ற மொழிகளில் நீதி அமைச்சினால் நடாத்தப்படுகின்ற எழுத்துப் பரீட்சையில் பெற்ற புள்ளிகளை அடிப்படையாகக்கொண்டு  சத்தியபிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பதற்கு பரிந்துரை செய்கிறது.

எழுத்துப் பரீட்சை நடத்தப்படாத மொழிகளுக்கு மொழித் திறனை நிரூபிக்கும்  சான்றிதழுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நடைமுறை

சரியாகப் பூர்த்திசெய்யப்பட்ட சத்தியபிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர்கள் பதவிக்கான விண்ணப்பத்தை  இதன் கடைசியில் இணைக்கப்பட்டுள்ள மாதிரி படிவத்திற்கு அமைவாகத் தயாரித்து  கல்வித்தகைமை சான்றிதழ்களுடனும்  மொழித் தேர்ச்சி சான்றிதழ்களுடனும்  செயலாளர், நீதி அமைச்சு, கொழும்பு 12 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்   அல்லது நீதி அமைச்சின் குறித்த பிரிவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரிடம் ஒப்படைக்க முடியும்.

விண்ணப்ப படிவங்களைப் பெறுதல்

விண்ணப்பங்களை அமைச்சில் அவ்விடயத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்ப படிவங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம்

கட்டணம் அறவிடப்பட மாட்டாது.

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல்

விண்ணப்பங்களைப் பதிவுத்தபால்மூலம் அனுப்பலாம் அல்லது நீதி அமைச்சின் குறித்த பிரிவில் வழமையான அலுவலக நேரத்தில் ஒப்படைக்கலாம்.

சேவை வழங்குவதற்கான நேரம்

வழமையான அலுவலக நேரம்

தகைமையை நிரூபிப்பதற்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

மொழித் தேர்ச்சியை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களின் கான்றுப்படுத்தப்பட்ட பிரதி

இந்த விடயத்திற்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பெயர், பதவி தொலைபேசி

தொலைநகல்

திரு. சுனில் சமரவீர
மேலதிக செயலாளர் (நிர்வாகம்)
+94 112 320 784 +94 112 320 784

திருமதி. ஆர்.பி.எஸ். சமன்குமாரி
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (நிர்வாகம்)

+94 112 436 360 +94 112 436 360
திருமதி டபிள்யூ.ஏ.ரி.எஸ்.வாரியப்பெருமா
உதவிச் செயலாளர் (நிர்வாகம்)
+94 112 452 175 +94 112 320 785

​மொழிபெயர்ப்பாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை 2017/2018 

நிகழ்வுகள் நாட்காட்டி