தகைமைகள்

 • இலங்கைப் பிரசையாக இருக்க வேண்டும்.
 • நியமனத்திற்கு 02 வருடங்களுக்கு முன்பிருந்து நிரந்தரமாகக் குடியிருக்க வேண்டும்.
 • விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதிக்கு 30 வயதுக்குக் குறையாதவராகவும் 62 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.          
 • க.பொ.த. (உ/த)பரீட்சையில் 3 சாதாரண சித்திகளுடன் சித்தியடைந்திருக்க வேண்டும்.(விஞ்ஞான துறையில் சித்தியடைந்தவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்).
 • திடீர் மரணவிசாரணை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கின்ற முஸ்லீம் விண்ணப்பதாரர்கள் சரளமாக தமிழ் மொழியில் எழுதக்கூடியவர்களாகவும் பேசக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.
 • மிகச் சிறந்த ஒழுக்கமுடையவராகவும் உடல், உள தகுதியுடையவராகவும் இருக்க வேண்டும். மது பழக்கம் இல்லாதவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் நடைமுறை

 1. திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட முடிவு திகதியன்று அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
 2. அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மாதிரி படிவத்திற்கு அமைவாக அல்லது நீதி அமைச்சிலிருந்து பெறப்பட்ட விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
 3. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், நீதி அமைச்சு, கொழும்பு 12 என்ற முகவரிக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்ப வேண்டும். அல்லது நீதி அமைச்சின் வரவேற்பு கூடத்தில் அல்லது சமாதான நீதவான் பிரிவில் ஒப்படைக்க முடியும்.
விண்ணப்ப படிவங்களைப் பெறுதல்
 1. அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மாதிரி படிவம் அல்லது
 2. நீதி அமைச்சின் நிர்வாக பிரிவிலிருந்து பெற்றுக்கொண்ட மாதிரி படிவம்.
விண்ணப்ப படிவங்களுக்கான கட்டணம்

கட்டணம் அறவிடப்பட மாட்டாது.

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல்

விண்ணப்பங்களை நீதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்ப வேண்டும் அல்லது வழமையான அலுவலக நேரத்தில் விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தரிடம் கையளிக்க முடியும்.

சேவைக் கட்டணம்

இச் சேவைக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது.

சேவை வழங்குவதற்கான நேரம்

வழமையான அலுவலக நேரம்

தகைமையை நிரூபிப்பதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

நேர்முக பரீட்சை நடைபெறும் திகதி விண்ணப்பதாரர்களுக்கு  எழுத்துமூலம் அறிவிக்கப்படும். நேர்முகப் பரீட்சையின்போது சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விடயத்திற்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பெயர், பதவி தொலைபேசி

தொலைநகல்

திரு. சுனில் சமரவீர
மேலதிக செயலாளர் (நிர்வாகம்)

+94 112 320 784 +94 112 320 784
 திருமதி.ஆர்.பி.எஸ்.சமன்குமாரி
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (நிர்வாகம்)
+94 112 436 360 +94 112 436 360
திருமதி டபிள்யூ.ஏ.ரி.எஸ்.வாரியப்பெருமா
உதவிச் செயலாளர் (நிர்வாகம்)
+94 112 452 175 +94 112 320 785

மாதிரி விண்ணப்ப படிவம்

இணைப்பு -1 இல் மாதிரி விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகள் நாட்காட்டி