பிரதான பணிகள்

 1. சமாதான நீதவான்களை நியமித்தல் மற்றும் அந்த நியமனங்களை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்தல்.
 2. சமாதான நீதவான்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல்.
 3. பதிவு இலக்கம் வழங்கப்படாத சமாதான நீதவான்களுக்கு பதிவு இலக்கங்களை வழங்குதல்.
 4. சமாதான நீதவான்களின் மூல நியமன கடிதம் காணாமற்போனால் அவர்களுக்கு நியமன கடிதங்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல்.
 5. சத்திய கடதாசிகள் ஆவணங்கள் போன்றவற்றை சான்றுப்படுத்துவதற்கு சமாதான நீதவான்களின் நியமனகடிதங்களின் பதிவில் அதிகாரமளித்தல்.
 6. சமாதான நீதவான்கள் தவறான செயல்களைப் புரிந்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்தால் அவற்றை விசாரணை செய்தல்.

தகைமைகள்

ஒழுங்காக நியமனம் பெற்றவர் சமாதான நீதவானாவதற்கு அவர் தகுந்த நீதிமன்றமொன்றில் சத்தியபிரமாணம் அல்லது உறுதிப்பிரமாணம் செய்ய வேண்டும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறை

சரியாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் குறிப்பிடப்பட்ட பின்னிணைப்புகளுடன் செயலாளர், நீதி அமைச்சு, கொழும்பு 12 என்ற முகவரிக்கு அனுப்பப்படுதல் வேண்டும். அல்லது வழமையான அலுவலக நேரத்தில் நீதி அமைச்சின் சமாதான நீதவான் பிரிவில் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.

சமாதான நீதவான் அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள்

விண்ணப்பங்களை நீதி அமைச்சின் வரவேற்பு கூடத்தில் அல்லது சமாதான நீதவான் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.

சமாதான நீதவான் அடையாள அட்டைகளுக்கான விண்ணப்ப கட்டணம்

இந்த சேவை இலவசமானது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுதல்

சரியாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை செயலாளர், நீதி அமைச்சு, கொழும்பு 12 என்ற முகவரிக்கு பதிவுத் தபால்மூலம் அனுப்ப வேண்டும். அல்லது வழமையான அலுவலக நேரத்தில் நீதி அமைச்சின் சமாதான நீதவான் பிரிவில் ஒப்படைக்க வேண்டும்.

சமாதான நீதவான் அடையாள அட்டைகள் தொடர்பில் செயலாற்றுவதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்

கொழும்பு 10, மக்கள் வங்கி நகர கிளையில் 176-1-001-9-9025184 என்ற கணக்கு இலக்கத்தில் "நீதி அமைச்சின் செயலாளர்" பெயரில் வரவுவைப்பதற்கு ரூ.200/- செலுத்தப்பட வேண்டும். பணம் செலுத்தியதை நிரூபிப்பதற்கு வங்கி வழங்குகின்ற பணவரவுத் துண்டை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இக்கொடுப்பனவை நீதி அமைச்சின் கணக்கு பிரிவிலும் செலுத்த முடியும்.

சமாதான நீதவான் அடையாள அட்டைகள் தொடர்பில் செயலாற்றுவதற்கும் விநியோகிப்பதற்கும் செலவாகும் காலம்

வழமையான சேவை மணித்தியாலங்கள்

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

 1. நீதி அமைச்சின் செயலாளர் வழங்கிய நியமன கடிதத்தின் போட்டோ பிரதி.(தயவுசெய்து நீதி அமைச்சர் கையொப்பமிட்டு வழங்கிய உள்ளடக்க விளக்க கடித்ததை இணைக்க வேண்டாம்.)
 2. நீதி மன்றத்தின் முன்னால் சத்தியபிரமாணம்/ உறுதிப்பிரமாணம் செய்ததன் பிரதி
 3. தேசிய அடையான அட்டையின் போட்டோ பிரதி
 4. சமாதான நீதவான் அடையாள அட்டைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் திகதிக்கு ஆறு மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட 40மிமீ × 40மிமீ அளவிலான வர்ணப் புகைப்படம் இரண்டு.(நியமன கடிதத்தின் 08ஆம் பந்தியில் கொடுக்கப்பட்டுள்ளவாறு புகைப்படத்தின் மறுபக்கத்தில் விண்ணப்பதாரரின் பெயரும் ஜேபி பதிவு இலக்கமும் எழுதப்படுதல் வேண்டும்.)
 5. கொடுப்பனவை உறுதிசெய்வதற்கு பற்றுச் சீட்டு.(வங்கியில் கொடுப்பனவை மேற்கொண்டால் வங்கி வரவு துண்டு. நீதி அமைச்சின் காசாளரிடம் கொடுப்பனவை மேற்கொண்டால் அவர் வழங்கிய பற்றுச்சீட்டு)
 6. வதிவிட முகவரியில் ஏதேனும் மாற்றமிருப்பின் கிராம சேவையாளர் வழங்கிய வதிவிட சான்றிழ்.
 7. தபால்மூலம் சமாதான நீதவான் அடையாள அட்டையை அனுப்புவதற்கு விண்ணப்பதாரரின் சுயமுகவரியிடப்பட்ட ரூபா 35/- முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை.

விடயத்துக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்

பெயர், பதவி தொலைபேசி

தொலைநகல்

திரு. சுனில் சமரவீர
மேலதிக செயலாளர் (நிர்வாகம்)

+94 112 320 784 +94 112 320 784
திருமதி. ஆர்.பி.எஸ். சமன்குமாரி
சிரேஷ்ட உதவிச் செயலாளர் (நிர்வாகம்)
+94 112 436 360 +94 112 436 360
திருமதி. பி.டப்.டீ.ஜி. மனோஹரி பெரேரா
நிர்வாக உத்தியோகத்தர்
+94 112 329 146 +94 112 320 785

புதிய சமாதான நீதவான்களுக்கான  அடையாள அட்டைகள் விண்ணப்பம்

நிகழ்வுகள் நாட்காட்டி