அறிமுகம்
சட்டத்தரணிகள் குழாமில் தமது பெயரை உட்படுத்திக்கொள்வதற்கு விரும்புகின்றவர்களுக்கு நடாத்தப்படுகின்ற சட்டக்கல்வியை முகாமைத்துவம் செய்வதை, 1900ம் ஆண்டின் 2ம் இலக்க சட்டக் கல்விப் பேரவையின் சட்டத்தின் பிரகாரம் இலங்கை சட்டக்கல்லூரி கொண்டுள்ளது. சட்டக் கல்விப்பேரவை, பிரதம நீதியரசர் (தலைவர்), சட்டமாஅதிபர், இரண்டு உயர் நீதிமன்ற நீதியரசர்கள், நீதி அமைச்சின் செயலாளர், மன்றாடியார், சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்மொழியப்பட்ட இரண்டு அங்கத்தவர்கள் நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஆறு அங்கத்தவர்கள் ஆகியோர்களினால் அமையப்பெற்றுள்ளது.
மூன்றரை வருட கால பாடத்திட்டத்தை சட்டக்கல்லூரி கொண்டுள்ளது. ஒவ்வொரு வருட இறுதியிலும் மற்றும் ஏப்ரல் மாதத்திலும் கல்லூரி, முதன்மை நிலை, இடை நிலை, இறுதி நிலை மாணவர்களுக்கு பரீடசைகளை நடாத்துகின்றது. இந்தப் பரீட்சைகளை நிறைவு செய்ததன் பின்னர் இவர்கள், குறைந்தது எட்டு வருட கால அனுபவத்தினைக் கொண்ட சட்டத்தரணி ஒருவரிடத்தில் ஆறு மாத காலம் பயிலுனராக சேவை செய்தல் வேண்டும்.
இலங்கை சட்டக் கல்லூரி ஒரு சுயவருமான தாபனமாகும். சட்டத்தரணிகள் தொழிலில் ஈடுபடும் சட்டத்தரணிகளாலும் சட்டத்தரணிகளாக தாபனங்களில் சேவையாற்றும் வருகை தரும் விரிவுரையாளர்களினாலும் விரிவுரைகள் நடாத்தப்படுகின்றன. கல்வித்தரத்தில் சிறந்த இவர்கள் அனைவரும் ஜனாதிபதி சட்டத்தரணிகளாகவோ அல்லது தேர்ச்சிமிக்க சட்டத்தரணிகளாகவோ இருப்பர்.
இல 244, புதுக்கடை வீதி,
த.பெ. இல 1501,
கொழும்பு 12.
+94 112 473 119/ 323759
+94 112 385 847
இலங்கை சட்டக் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக
இலங்கை நீதிபதிகள் நிறுவனமானது 1985ம் ஆண்டு 46ம் இலக்க சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் கௌரவ பிரதம நீதியரசர் மற்றும் அதமேதகு சனாதிபதியினால் நியமிக்கப்படும் இரு உயர்நீதிமன்ற நீதியரசர்களை உள்ளடக்கிய 5 உறுப்பினர்களைக் கொண்ட முகாமையாளர் சபையினால் நிருவகிக்கப்படுகிறது. இந் நிறுவனத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கங்கள் அமைச்சினால் ஒதுக்கப்படுகிறது.
விடயங்களும் பணிகளும்:-
- நீதித்துறை அலுவலர்களுக்கு நீதித்துறை மற்றும் சட்டம் சம்பந்தமாக தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கு வசதி செய்தல்.
- நீதித்துறை அலுவலர்கள் தமது தொழில்சார் நிபுணத்துவத்தை விருத்தி செய்வதற்கும் தமது அறிவையும் திறமைகளையும் விருத்திசெய்வதற்கும் கூட்டங்கள், மகாநாடுகள், விரிவுரைகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்கு செய்தல்.
- நீதி நிருவாகம் சம்பந்தமான பலதரப்பட்ட விடயங்களில் ஆராய்சிப் பாடநெறிகளை நடாத்துவதுடன் நீதித்துறை அலுவலர்களுக்கு நூலக வசதிகள் மற்றும் கல்வி சம்பந்தமான பொருட்களை வழங்குதல்.
- நீதிதுறை அலுவலர்களுக்கு நூலக வசதிகளையும் ஏனைய கல்வி சார் பொருட்களையும் வழங்குதல்.
இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக
சட்ட உதவி ஆணைக் குழுவானது, 1978 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க சட்ட உதவி சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டது. ஏழ்மையின் காரணமாக நீதியின் அனுசரணையைப் பெற்றுக் கொள்ள இயலாத இலங்கையின் ஏழை எளிய மக்களுக்கு சட்ட உதவி வழங்குவது இதன் பிரதான குறிக்கோளாகும். குறைந்த வருமானமுடைய மக்களுக்கு இலவசமாக சட்டத்தரணிகளின் உதவியை பெற்றுக் கொடுப்பது, முழு சமூகத்துக்கும் சட்டத்தைப் பற்றிய அறிவூட்டுதல், புதிய சட்ட உருவாக்கத்திலும் சட்ட மீளமைப்பிலும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல் என்பன இதன் அடிப்படைச் செயற்பாடுகளாகும்.
சட்டப் பிரிவு
- நீதியின் அனுசரணையைப் பெற்றுக் கொள்ள இயலாதவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராவது.
- எவருக்கும் இலவசமாக சட்ட ஆலோசனை வழங்குவது.
- புதிய சட்ட உருவாக்கத்திலும் சட்ட மீளமைப்பிலும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவது.
தலைமைக் காரியாலயத்தின் கீழ் நேரடியாகச் செயற்படும் கொழும்பு சட்ட உதவி மத்திய நிலையம் உள்ளடங்கலாக 77 பிரதேச சட்ட உதவி அலுவலகங்கள் இயங்குகின்றன. நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளின் போது பிரிவு கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெறப்படும் வருமான அறிக்கை கவனத்திற் கொள்ளப்படுமாயினும், தாபரிப்பு வழக்குகளில் அது கருத்திற் கொள்ளப்படுவதில்லை.
இலங்கை சட்ட உதவிகள் ஆணைக்குழு
இல 129, புதுக்கடை வீதி,
கொழும்பு - 12,
இலங்கை.
+94 115 335 329/ +94 115 335 281
+94 112 433 618
இலங்கை சட்ட உதவிகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைய தளத்தை பார்வையிட இங்கே சொடுக்குக
1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தின் மூலம் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. அதன் கீழ் இலங்கையின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மத்தியஸ்த சபைகளைத் தாபிக்க ஆரம்பிக்கப்பட்டது. இது நீதிமன்றச் செயற்பாட்டை எளிதாக்கும் நோக்கத்துடன் பிணக்குளைத் தீர்க்கும் மாற்று வழிமுறையொன்றாக நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற பிணக்குகளில் சிறு பிணக்குளைத் தீர்ப்பதற்காகத் தயார் செய்யப்பட்ட மிகப்பெறுமதியான செயற்பாடொன்றாக அறிமுகம் செய்யலாம். இதுவரை இலங்கை முழுவதிலும் 329 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாபிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்கள் குழாத்துக்களில் சுமார் 8266 மத்தியஸ்தர்கள் சுயேச்சையுடன் பணி புரிகின்றனர்.
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு 05 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன் அவர்கள் அதிமேதகு சனாதிபதியால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்படுகின்றனர். மத்தியஸ்தர்களை நியமித்தல், மாற்றஞ் செய்தல் மற்றும் அவர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்றவற்றிற்கான அதிகாரம் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவிடம் உள்ளது.
மத்தியஸ்த செயற்பாட்டின் மூலம் இரு திறத்தவர்கள் அல்லது அதற்கு மேற்பட்டோர்களுக்கிடையே ஏற்படுகின்ற பிணக்குளைத் தீர்த்துக் கொள்வதற்காக மூன்றாம் திறத்தவராக மத்தியஸ்தர்கள் செயற்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டிலும் மத்தியஸ்த சபைகளிடம் ஆற்றுப்படுத்தப்படுகின்ற பிணக்குகளின் அதிகரிப்பானது சமுதாயம் தமது பிணக்குகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இலகுவான மற்றும் குறைந்த செலவுப் பொறிமுறையொன்றாக மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு சான்றாகவுள்ளது. மத்தியஸ்த சபைகளுக்கு ஆற்றுப்படுத்தப்படும் பிணக்குகளின் எண்ணிக்கை நூறாயிரத்தை விட அதிகதித்துள்ளமை இதனை நிரூபிக்கிறது.
more detail click website: http://mediation.gov.lk/
மத்தியஸ்தர்களாக நியமிப்பதற்குப்பெயர் குறித்த நியமனங்களைக் கோரும் அறிவித்தல்
| வர்த்தமானப் பத்தரிகை திகதி | வர்த்தமானப் பத்தரிகை |
| வர்த்தமானப் பத்தரிகை திகதி 19.04.2019 | வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 214.2 KB ] |
| வர்த்தமானப் பத்தரிகை திகதி 23.01.2017 | வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 338.62 KB ] |
| வர்த்தமானப் பத்தரிகை திகதி 07.06.2018 | வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 112.36 KB ] |
| வர்த்தமானப் பத்தரிகை திகதி 04.04.2018 | வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 77.31 KB ] |
| வர்த்தமானப் பத்தரிகை திகதி 04.07.2018 | வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 214 KB ] |
| வர்த்தமானப் பத்தரிகை திகதி 27.02.2019 | வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 137.38 KB ] |
| வர்த்தமானப் பத்தரிகை திகதி 19.03.2018 | வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 61.09 KB ] |
| வர்த்தமானப் பத்தரிகை திகதி 26.02.2018 | வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 538.5 KB ] |
| வர்த்தமானப் பத்தரிகை திகதி 29.09.2017 | வர்த்தமானப் பத்தரிகை [ PDF - 857.37 KB ] |







